Home » , » ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் நாட்டில் உள்ளது – சாணக்கியன்

ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் நாட்டில் உள்ளது – சாணக்கியன்

 


ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லசந்த விக்கிரமதுங்கவின் 12வது நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றது.இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”கொழும்பிலே இருக்கும் பல ஊடகங்கள் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் பத்திரியையாளர்களை அரசு தமது வியாபாரிகளை விட்டு அனைத்தையும் கைப்பற்றும் சில நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் பல சிரேஷ்ட ஊடகவியலாள்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை விடுத்து நீங்கள் இவ்வாறான வேலைகளை தொடர்ச்சியாக செய்வீர்களானால் உங்களை வேலையில் இருந்து நீக்கவேண்டிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்.

2022 ம் ஆண்டிலே ஜனாதிபதியாக இருக்கும் அவர்தான் அன்று பாதுகாப்பு செயலாளராக இருந்தவர். அவர் 2009 ம் ஆண்டு லசந்த விக்கிரமசிங்க கொல்லப்பட்டதன் பிறகு கொடுத்த போட்டி ஒன்றை பார்த்திருந்தேன் அப்போது யார் இந்த லசந்த என்று கேட்டிருந்தார்.

எனக்கும் அவருக்கும் எதுவித பிரச்சனையும் இல்லை ஆனால் அவருக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்ய இருக்கின்றேன் என்றவர் தான் இன்று நாட்டிலே ஜனாதிபதியாக இருக்கின்றார். அவருக்காக வழக்கு பேசிய அலி சப்ரி தான் இந்த நாட்டிலே நீதி அமைச்சராக இருக்கின்றார்.

ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் அப்படியான காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் லசந்த மட்டுமல்ல 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். அதேவேளை பொலிசாரால் லசந்த கொலை தொடார்பாக வழக்கு தொடரவில்லை.

இருந்தபோதும் நல்லாட்சி அரசாங்கத்தில் கூட அந்த வழக்கை ஆரம்பித்தாலும் அதை திருப்திகரமான முடிவை எந்த அரசாங்கமாக இருந்தாலும் பெற முடியவில்லை என்பது கவலையான விடையம்.

எனவே இனிவரும் காலங்களிலாவது படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் கொலை செய்யப்பட்டவர்களுக்கு அரசாங்காத்தாலே நீதிமன்றத்தாலே தண்டனை வழங்காவிட்டாலும் இறைவன் தண்டணை வழங்குவான்” என தெரிவித்தார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |