Advertisement

Responsive Advertisement

நாட்டு மக்களுக்கு திடீர் சலுகைகள் அறிவிப்பு !

 


அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.


அத்துடன், ஓய்வூப் பெற்றுக்கொண்டுள்ள 666,480 பேருக்கு, 5000 ரூபாவை மாதாந்தம், மேலதிக கொடுப்பனவாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சமுர்த்தி பயனாளர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3500 ரூபா கொடுப்பனவுக்கு மேலதிகமாக 1000 ரூபாவை இந்த மாதம் முதல் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, ஒரு கிலோகிராம் நெல்லுக்கு 75 ரூபாவை விவசாயிகளுக்கு வழங்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

மலையக மக்களுக்கு மாதாந்தம் ஒரு கிலோகிராம் கோதுமை மாவை, 80 ரூபா விதம் வழங்குவதுடன், அதிக பட்சமாக மாதமொன்றுக்கு 15 கிலோகிராம் கோதுமை மாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து வகைகளுக்கு வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments