( அஸ்ஹர் இப்றாஹிம்)
மன்னார் மாவட்ட விவசாய திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சேதன பசளைகள் மற்றும் சேதன திரவ பசளைகளை உற்பத்தி செய்யும் நோக்கோடு தெரிவு செய்யப்பட்ட சுமார் 60 பயனாளிகளுக்கான சேதன பசளைகள் உற்பத்தி செய்யும் இயந்திரம் மற்றும் அதற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மாவட்ட விவசாய பயிற்சி நிலையம் (உயிலங்குளம்) வைத்து கடந்த வியாளக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் , முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பயனாளிகளுக்கான இயந்திர உபகரணங்களை கையளித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.உதயசந்திரன், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் மெரின் குமார் மற்றும் கால்நடை, சுகாதார உற்பத்தி திணைக்கள அதிகாரிகள், பயனாளிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

0 comments: