Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி ; மற்றுமொருவர் காயம்

 


மட்டக்களப்பு சந்திவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.


நேற்று மாலை முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்து இடம்பெற்றவேளை அவ்வீதி வழியே சென்ற வாகனமொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் விபத்து இடம்பெற்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.

குறுக்குப்பாதையிலிருந்து பிரதான வீதிக்கு நுழைந்த முச்சக்கர வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முச்சக்கர வண்டியினைச் செலுத்தியவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்திவெளி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 68 வயதுடைய நாகப்பன் ராமையா என்பவரே உயிரிழந்தவர்.

செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த இச்சடலத்தினை திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் பார்வையிட்டு விசாரணைகளை ஆரம்பித்தார்.

சந்திவெளி பொலிஸார் விபத்துச் சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரணமடைந்தவர் பேக்கறி உரிமையாளராவார். இவர் முச்சக்கர வண்டியில் கடைத்தெருவிற்குச் சென்றவேளை விபத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments