இலங்கை பாடசாலை கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த பாடசாலைகளுக்கிடையிலான 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டியின் ஒரு அங்கமாக கிண்ணியா தேசியக் கல்லூரிக்கும் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியக் கல்லூரிக்கும் இடையிலான போட்டியில் மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியக் கல்லூரி 141 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற மேற்படி போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசியக் கல்லூரி 45.2 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 260 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கிண்ணியா தேசியக் கல்லூரி 32.5 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
சிவானந்தா தேசியக் கல்லூரியைச் சேர்ந்த குரு 209 ஓட்டங்களுக்கு92 ஓட்டங்களையும், நிருகாஸ் 57 பந்து வீச்சுக்களில் 29 ஓட்டங்களையும் பெற்றதுடன், துவா 4 விக்கட்டுக்களையும் , நிருபன் 2 விக்கட்டுக்களையும், வசுதா 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றி வெற்றிக்கு வழியமைத்தனர்.
0 comments: