சிறிலங்கா அரசாங்கத்தை விமர்சித்து வருவதன் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரையும் பதவியில் இருந்து நீக்க அரச தலைவர் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில அல்லது வாசுதேவ நாணயக்கார ஆகிய மூவரில் ஒருவராக இருக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பை மீறியமை, அமைச்சரவைக்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளமை இதற்கான காரணம் என தெரியவருகிறது.
அத்துடன் நீதிமன்றத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை திரும்ப பெறுமாறும் இந்த அமைச்சர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்த இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை கோட்டாபய திடீரென இன்று பதவியில் இருந்து நீக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: