Advertisement

Responsive Advertisement

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை


 ( அஸ்ஹர் இப்றாஹிம்)


இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தால் நடத்தப்படவுள்ள 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை நாட்டிலுள்ள 1438 பரீட்சை நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி.தர்மசேன சகல மாகாண கல்விப் பணிப்பகாளர்களுக்கும் சுற்றுநிருபம் மூலம் அறிவித்துள்ளார்.
இப்பரீட்சைக்கு 2,29,141 பேர் பாடசாலை பரீட்சாத்திகளாகவும் , 66,101 பேர் தனிப்பட்ட பரீட்சாத்திகளாகவும் தோற்றவுள்ளனர்.
பரீட்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பரீட்சை நிலையங்களை முன்னறிவித்தல் இன்றி  சோதனை இடுவதெற்கென பரீட்சைகள் திணைக்களத்தால் 1425 அலுவலகர்கள் நியமிக்கப்பட்டிருப்பதுடன் , கடந்த வருடம் பரீட்சை மோசடி செய்த 156 பரீட்சாத்திகளின் பரீட்சை முடிவுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை அதிபர்கள் மாணவர்கள் பரீட்சைக்கு செல்வதற்கு முன் பரீட்சை நிலையங்களில் மாணவர்கள்  நடந்து கொள்ளும் முறைகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் எனவும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு மேலதிக வகுப்புகள் நடத்துதல் , மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிட்டு வழங்குதல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்  பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இப்பரீட்சை 2021 ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கொவிட் – 19 வைரசு தொற்று காரணமாக பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments