Advertisement

Responsive Advertisement

வறிய குடும்பங்களுக்கு 10.5 இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகள்



(அஸ்ஹர் இப்றாஹிம்)

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு மீளக்குடியேறியுள்ள முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சிலாபத்துறை பகுதி மக்களின் அவசர தேவைப்பாட்டை கருத்திற் கொண்டு தெரிவு செய்யப்பட்ட 13 வறிய குடும்பங்களுக்கு தலா 10.5 இலட்சம் பெறுமதியான வீட்டினை அமைக்கும் உயரிய நோக்கோடு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும்  முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்களின் துரித முயற்சியின்


பிரதிபலனாக இன்று ஞாயிற்றுக்கிழமை( 16 ) 13 வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் உத்தியோகப்பூர்வமாக நாட்டி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச முக்கியஸ்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments