மாத்தளையில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து உக்குவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாத்தளை உக்குவளை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபரான பிரதேச சபை உறுப்பினர், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சிறுமி, சந்தேக நபருக்கு சொந்தமான வீட்டில் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் பெரியவர்கள் எவருமில்லாத நேரத்தில் அங்கு சென்றுள்ள சந்தேக நபர், சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 comments: