Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம் நியமனம்

 


மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக நடராஜா சிவலிங்கம்  நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதயகம்பத்தினால் 30ம் திகதி நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நடராஜா சிவலிங்கம் இன்று  வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு மாநகர சபைக்கு சென்று தனது கடமையினை ஆரம்பித்தார். 

இலங்கை நிருவாக சேவை (தரம் -1 ) உத்தியோகத்தரான இவர் உலக வங்கி திட்டத்திலும் , பின்னர் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின்  பிரதி ஆணையாளராகவும்  பணியாற்றியுள்ளார்.

Post a Comment

0 Comments