அம்பாரை நகரிலிருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஆட்டோவில் வருகை தந்த பயணி ஒருவர் ஆட்டோ கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக ஆட்டோ சாரதியின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
இது பற்றி தெரியவருவதாவது
நேற்று மாலை அம்பாறை நகரில் இருந்து சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தருவதற்காக போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள் இல்லாத நிலையில் அம்பாறை நகரில் தரித்திருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி சாய்ந்தமருது பிரதேசத்திற்கு வருகை தந்த இளைஞன் ஒருவன் சாய்ந்தமருது வொலிவேரியன் என்ற கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் இறங்கி விட்டு ஆட்டோக்குரிய கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முனைந்துள்ளார்
இதன்போது மாற்றுமத சகோதரரான ஆட்டோ சாரதி குறித்த இளைஞன் பிடித்து ஆட்டோ கட்டணத்தை செலுத்துமாறு கேட்டுக் கொண்ட போது, அவ்விளைஞன் தனது பணப்பையில் இருந்த சிறிய கத்தியை எடுத்து ஆட்டோ சாரதியின் மூக்கை அறுத்து விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகி உள்ளார்
இதனை அடுத்து முக்கறுந்த நிலையில் செய்வதறியாது ஓட்டம் பிடித்த ஆட்டோ சாரதியை சாய்ந்தமருது பிரதான வீதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்த மக்கள் காப்பாற்றி சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக அங்கிருந்து கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மாற்றப்பட்டுள்ளார்
இது தொடர்பில் சாய்ந்தமருது பொலிசாருக்கு கிடைத்த முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
0 comments: