களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருப்பழுகாமம் விபுலானந்தபுரம் கிராம உத்தியோகஸ்தர் பிரிவில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை பழுகாமம் மயானத்துக்கு அருகாமையில் உள்ள வீதியில் உள்ள ஆலமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இராயேந்திரன் இராஜன் (வயது 36) குடும்பஸ்தரே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுக்கு அமையக களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் பார்வையிட்டு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
0 Comments