அதிகரித்துள்ள அமெரிக்க டொலர் கையிருப்பு தொடர்பான பிரச்சினை காரணமாக நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பை அதிகரிப்பதற்காக கையிருப்பில் உள்ள தங்கத்தை விற்பனை செய்யும் யோசனை ஒன்று கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அமைச்சர்கள் இந்த யோசனை தொடர்பாக பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்த விடயம் சம்பந்தமாக அரசாங்கம் பொருளாதார நிபுணர்களின் நிலைப்பாடுகளை கேட்டறிய வேண்டும் என பல அமைச்சர்கள் இதன் போது கூறியுள்ளனர்.
எது எப்படி இருந்த போதிலும் அமைச்சரவைக் கூட்டத்தில் தங்கத்தை விற்பனை செய்வது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவிலலை என தெரியவருகிறது.
இலங்கையின் திறைசேரியில் சுமார் 300 மில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட தங்கம் கையிருப்பில் இருப்பதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
0 comments: