Home » » லிட்ரோ எரிவாயுவை தரையிறக்க அனுமதி!

லிட்ரோ எரிவாயுவை தரையிறக்க அனுமதி!

 


லிட்ரோ நிறுவனத்தினால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் உள்ள எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக வந்த கப்பல் ஒன்றில் இருந்தே எரிவாயுவை இறக்குவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் லிட்ரோ நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட எரிவாயு தாங்கி ஒன்று இலங்கை வந்தடைந்ததுடன், நுகர்வோர் விவகார அதிகாரசபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் உட்பட பல குழுக்கள் அதன் தரம் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டன.

இதன்போது குறித்த எரிவாயுவில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் கலவை தரமானதாக இருந்தமை தெரியவந்தது.

ஆனால், "எத்தில் மெர்கப்டன்" என்ற ரசாயனம் தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக கப்பல்களில் எரிவாயுவை இறக்குவதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதிக்கவில்லை.

எவ்வாறாயினும், நேற்று (17) கப்பல் ஒன்றில் இருந்து எரிவாயுவை இறக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |