நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அலரி மாளிகையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு (Mahinda Rajapaksa) அறிவிக்காமல் அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது.
கடந்த திங்கள் கிழமை அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், சிரேஷ்ட அரச அதிகாரிகள், அரசாங்க அதிபர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்களின் பிரதிநிதிகள் கலந்துக்கொண்டதாக தெரியவருகிறது.
எனினும் இவ்வாறான கூட்டம் நடைபெறுவது குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்ச அறிந்திருக்கவில்லை எனவும் பேசப்படுகிறது.
அன்றைய தினம் பிரதமர் தங்காலைக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார். இதனையடுத்து அன்று மாலை இது பற்றி பிரதமருக்கு நெருக்கமானவர்கள் கேட்ட போது, அவற்றான கூட்டம் நடைபெறுவது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என பிரதமர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் நாட்டில் காணப்படும் நிலைமையில் நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தி, அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வது சம்பந்தமாக விசேட தெளிவுப்படுத்தல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
0 comments: