Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிறிலங்காவுக்கு அமெரிக்கா கடுமையான செய்தி : புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்பு

 


அனைத்துலக மனித உரிமை நாளில் சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு பயணத்தடை விதித்ததன் மூலம் அமெரிக்கா சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஒரு கடுமையான செய்தியை சொல்லியுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா சீனா, பெலாரஸ், உகாண்டா, பங்களாதேஷ், மற்றும் மெக்ஸிகோவை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 12 இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு தடைகளை அறிவித்த அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் அன்ரனி பிளிங்கன் அமெரிக்க வெளியுறவுக்கொள்கையின் மையத்தில் மனித உரிமைகளை வைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும் அவற்றின் மீது பொறுப்புக்கூறல் கோரப்படும் எனவும் அவர் சிறிலங்காவின் பெயரை நேரடியாக கூறாமல் கருத்து தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த இரண்டு முன்னால் அதிகாரிகள் உட்பட்ட 12 பேருக்கு பயணத்தடை விதிக்கபட்டுள்ள செய்தியை அவர் பகிரங்கப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அனைத்துலக மனித உரிமை நாளை முன்னிட்டு சிறிலங்காவில் நேற்று(10) தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்திய நிலையில் சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான பயணத்தடை அறிவிக்கபட்டதன் மூலம் தமிழ் மக்களுக்குரிய ஒரு செய்தியும் சொல்லப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இதற்கிடையே சிறிலங்கா அரச தவைர் கோட்டாபாய காப்பாற்றிய சிறிலங்கா படைத்துறையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கப்பட்ட நகர்வுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத்தமிழர் பேரவை உட்பட்ட புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

Post a Comment

0 Comments