Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டு கல்லடியில் எரிவாயு அடுப்பு வெடிப்புச் சம்பவம்

 


நாட்டில் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சமையல் எரிவாயு கசிவினால் நாளாந்தம் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகி வருகின்றது .இதனால் பொது மக்கள் பேரச்சத்தில் உள்ளதுடன் அரசாங்கமும் குழப்பத்தில் உள்ளது. 


அதற்கமைய  இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் உள்ள  வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது .
இதன் போது யாருக்கும் காயம் ஏற்படவில்லை என வீட்டார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பில் பொலிஸிலும் அறிவித்துள்ளனர் . 

மேலும் நேற்று புதன்கிழமை  மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் பதிவாகியுள்ளது 

Post a Comment

0 Comments