Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்! நியாயப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்

 


பாகிஸ்தான் - சியல்கோட்டில் வன்முறைக் கும்பலால் கொடூரமான முறையில் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் படுகொலையைப் பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக் (Parvez Cuttack) நியாயப்படுத்தியுள்ளார்.

இளைஞர்களின் இத்தகைய செயல்கள் மோசமானவை அல்ல என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துளளார்.

மேலும் இது தொடர்பில் தனது உத்தியோக பூர்வ ருவிட்டர் தளத்திலும் பதிவிட்டுள்ளார். 

பாகிஸ்தான் டெய்லி இணையதளத்தின் ஆசிரியர் ஹம்சா அசார் சலாம், பாதுகாப்பு அமைச்சர் பர்வேஸ் கட்டாக்கின் அறிக்கையை மேற்கோள் காட்டி ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments