Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின்தடை தொடர்பில் வெளியான அறிவிப்பு


 நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு தற்போது சரி செய்யப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன (Sulakshana Jayawardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கை ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அசவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இருப்பினும், 2அவது மின்பிறப்பாக்கி இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை என்றும், முழுமையாக செயல்பட இன்னும் 2 நாட்கள் ஆகும்.

இதனால் இன்றும் நாளையும் மின்சாரத் தடை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

நாடு முழுவதும் இன்றும் நாளையும் மின்சாரத் தடை நடைமுறையில் இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாலை 6 மணியிலிருந்து இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணி நேர மின்சாரத் நடைமுறையில் இருக்கும்.

கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் மின்சாரத் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் மின் வழித்தடங்களில் ஏற்பட்ட கோளாறினால் இத்தடை ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நாள் தோறும் ஒரு மணிநேரம் மின்சாரத் தடை ஏற்பட்டிருந்து. எனினும், இன்று நிலைமை சீராகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளையும் மின்சாரத் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments