Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு காரால் ஏற்பட்ட பாரிய விபத்து- தந்தை மகனுக்கு நீதிமன்று வழங்கிய உத்தரவு!

 


வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் தந்தை மற்றும் மகனை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர, பொது மயானத்துக்கு அருகில் நேற்று காலை கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி  பயணித்த அதிசொகுசு ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கில்களையும், முச்சக்கரவண்டியொன்றையும், கார் ஒன்றையும் மோதி விபத்து ஏற்பட்டிருந்தது.

விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகியோரே எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் காயமடைந்த மேலும் மூவர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மஹபாகே காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments