Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? வெளியான புதிய தகவல்


சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் பயணப்பையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 42 வயதுடைய மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய வீதிக்கு அருகில் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த இடத்தில் பயணப்பையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது.


குறித்த இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பிரதேசவாசிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு வருகை தந்து பொலிஸார் சோதனை மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கிடமான பயணப்பையொன்று இருந்துள்ள நிலையில் அதில் சடலம் இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர்

Post a Comment

0 Comments