மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும் இரவு கடுகதி பாடுமீன் புகையிரத சேவை திருத்தப்பணிகள் காரணமாக பொலனறுவையிலிருந்து இடம்பெறவுள்ளது.
தினமும் இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்புக்குப் புறப்படும் இரவு கடுகதி பாடுமீன் புகையிரத சேவை சனிக்கிழமை 27ம் திகதி இரவு பொனறுவையிலிருந்து இரவு 10.20மணிக்கு புறப்படுமென மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபர் ஏ.பேரின்பராசா தெரிவித்துள்ளார்.
புணாணைக்கும், வெலிகந்தைக்குமிடையிலான பிரதேசத்தில் பாலம் திருத்தப்பணிகள் காரணமாகவே இப் புகையிரத சேவை பொலனறுவையிலிருந்து இடம்பெறவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments