Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் காணாமல் போன முல்லைத்தீவு சிறுவன் பாதுகாப்பாக மீட்பு

 


மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் காணாமல் போன முல்லைத்தீவைச் சேர்ந்த சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து மட்டக்களப்பு பருத்திச்சேனை, காயான்மடுவிலுள்ள தமது உறவினர் வீட்டுக்கு தாயாருடன் வந்த ஏழு வயது சிறுவன் அருகில் உள்ள ஆலயம் ஒன்றுக்கு தாயுடன் சென்றுவிட்டு தனியாக வீட்டிற்கு திரும்பிச் சென்ற வேளையில் வழிமாறிச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாதை மாறிய சிறுவன் குறிஞ்சாமுனை சந்தியில் சென்ற போது கன்னங்குடாவைச் சேர்ந்த பிரதீபன் நபரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ். பிரியங்கர தெரிவித்தார்.

இதனிடையே, சிறுவனிடம் விசாரணைகளை மேற்கொண்ட வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜீ.எஸ். பிரியங்கர தலைமையில் குற்றத்தடுப்பு பொலிஸார் சிறுவனின் தாயாரிடம் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் வைத்து சிறுவனை ஒப்படைத்தனர்

Post a Comment

0 Comments