நிதியமைச்சர் பசில் ராஜபகச இன்றையதினம் நாடாளுமன்றில் சமர்ப்பித்த வரவு செலவுத்திட்டம் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடத்தியது.
கொழும்பு – நகர சபையில் ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி, லிப்டன் சுற்று வட்டாரத்தில் நிறைவடைந்தது.
இதன்போது “நாட்டை அழிக்கும் ராஜபக்ச வீட்டுக்குப்போ” உட்பட பல்வேறு பதாதைகளை தாங்கிய வண்ணம் ஐக்கிய தேசியக் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மிக நீண்ட நாட்களுக்கு பின்னர், பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளது. இந்த ஆர்ப்பாட்ட பேரணியால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.






0 Comments