Advertisement

Responsive Advertisement

மீண்டும் பாடசாலைகள் மூடப்படும் அபாயம்


பாடசாலை மாணவர்களுக்கு இடையில் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தால் மீண்டும் பாடசாலைகளை மூட நேரிடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.

வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தவுடன் பாடசாலைகள் முழுமையாக திறக்கப்பட்டது நல்ல விடயம் என்ற போதிலும் மாணவர்கள் மத்தியில் வைரஸ் பரவுவது மீண்டும் தலைதூக்கியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நாட்டில் நாளாந்தம் தொடர்ச்சியாக 700 இற்கும் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

0 Comments