Advertisement

Responsive Advertisement

அடுத்த வருடத்திற்கான 'பட்ஜட்' 12ஆம் திகதி பாராளுமன்றத்தில்

 


அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் அன்றைய தினம் வரவு செலவுத் திட்ட யோசனைகள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.

நாட்டின் வளங்களை உச்ச அளவில் பிரயோசனமான முறையில் உபயோகிப்பதுஇ அடிமட்ட மக்களை வெற்றி பெறச் செய்து உற்பத்தி பொருளாதாரத்தை கேந்திரமாக கொண்ட வரவுசெலவுத்திட்டத்தை இம்முறை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.  இம்முறை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத்திட்டம் நாட்டின் 76வது வரவு செலவு திட்டம் என்பதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும்  இரண்டாவது வரவு செலவுத்திட்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments