ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை படிப்படியாக தீர்க்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) நாடாளுமன்றத்தில் இன்று (6) இதனைத் தெரிவித்தார்.
ஆசிரியர் மற்றும் அதிபர் சம்பள பிரச்சினை தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தேவையான தீர்வு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அரசு முடிவெடுத்துள்ளது, ஆசிரியர் மற்றும்அதிபர் சங்கங்களுக்கு உறுதிமொழி அளித்துள்ளது, என்றார்.
இதன்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, புகையிலை வரியை அதிகரிக்கவும், ஆசிரியர்-அதிபர் சம்பள ஒழுங்கின்மையை அகற்ற பணத்தை பயன்படுத்தவும் கோரிக்கை விடுத்தார்.
புத்திகவின் கோரிக்கை குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இது ஒரு முக்கியமான திட்டம் என்று கூறினார். நிதியமைச்சரிடம் பிரேரணையை சமர்ப்பிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
0 comments: