Advertisement

Responsive Advertisement

மாணவர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு வைத்தியத்துறை விடுத்துள்ள கோரிக்கை!



பொதுமக்கள் சரியான முறையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றவில்லை எனின் மீண்டும் கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் இருப்பதாக சிறுவர்கள் விஷேட வைத்தியர் சன்ன த சில்வா தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துது் தெரிவிக்கையில்,

பயணக் கட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டம் காரணமாக கொரோனா பரவலில் கட்டுப்பாட்டை காணக்கூடியதாக உள்ளது.

தொடர்ந்தும் டெல்டா வைரஸ் தொற்று பரவி வருவதனால் எதிர்காலத்தில் மிகவும் அபாயகரமான நிலை ஏற்பட வாய்ப்பு காணப்படுகின்றது.

இதுவரையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது பெற்றோரின் கடமை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments