சுமார் ஆறு மாதங்களின் பின்னர் ஆரம்ப வகுப்பு பாடசாலைகள் இன்று திறக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் ஆண்டு வரையான பாடசாலைகள் திறக்கப்பட்டன.மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பேணி பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 50 பாடசாலைகள் திறக்கப்பட்டதாக வலய கல்வி பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.
70 சதவீத்திற்கும் அதிகமான மாணவர்கள் வருகை தந்திருந்ததாக பாடசாலைகளின் அதிபர்கள் தெரிவித்தனர்.
மாணவர்கள் மிகவும் ஆர்வத்துடன் பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்ததை அவதானிக்க முடிந்தது.
0 Comments