இலங்கையின் வானிலையில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மேகமூட்டமான வானிலை நிலவும் என்று வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கு மேல் கனமழை பெய்யக்கூடும். ஏனைய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
0 Comments