Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்! எட்டப்பட்டது முடிவு


குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை முதலில் ஆரம்பிப்பதற்கான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி அனைத்து பாடசாலைகளும் ஒக்டோபர் 21 அன்று மீண்டும் திறப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் முடிவு செய்கிறார்கள்.

இது தொடர்பில் கல்வி அமைச்சருக்கும் மாகாண சபை ஆளுநர்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. 

200இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் 100 மாணவர்களை விடக் குறைவான பாடசாலைகளின் எல்லா வகுப்புகளையும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல அளவுகோல்களின் கீழ் 3,000 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த பாடசாலைகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது தொடர்பாகவும், இந்த கலந்துரையாடலின் போது ஆளுநர்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளனர்

Post a Comment

0 Comments