Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாகன இறக்குமதிக்கு புதிய யோசனை

 


இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில், அரசாங்கத்திற்கு யோசனை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இவ்வாறான அறிவிப்பை விடுத்தார்.

வாகனங்களை இறக்குமதி செய்யும் போது வெளிநாட்டு நாணயத்தை மாத்திரமே பயன்படுத்தி இறக்குமதி செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. “எனவே, முடிந்தால் வெளிநாட்டு நாணயத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது.

வெளிநாட்டு நாணயத்தில் செலுத்த ஒரு முறையை உருவாக்க
முடிந்தால், அந்நிய செலாவணி அதன் வழியாக நாட்டிற்கு கொண்டு
வர முடியும். இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிப்போம் என நம்புகின்றோம்” என ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments