நாரஹென்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் அமைந்துள்ள தடுப்பூசி நிலையத்தில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தங்களுக்கு மொடர்னா கொவிட் தடுப்பூசி வழங்குமாறு கூறி வந்த மாணவர்களால் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மையத்தில் தடுப்பூசி கொடுக்கப்படாது என இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில் மாணவர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
நாரஹென்பிட்டி இராணுவ வைத்தியசாலைக்கு இன்று பாரியளவு பல்கலைக்கழக மாணவர்கள் வருகைத்தந்துள்ளனர். எப்படியிருப்பினும் குறித்த தடுப்பூசி அந்த நிலையத்தில் வழங்கப்படாதென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைத்த கடிதத்திற்கமைய குறித்த மாணவர்கள் அங்கு வருகைத்தந்துள்ளனர். அந்த கடிதத்தில் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களில் மாலை 4 மணி வரை இராணுவ வைத்தியசாலையில் மொடர்னா தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது.
மாணவர்களின் அடையாள அட்டைகளை வழங்கி தடுப்பூசி பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும் அதனை வழங்காமையினால் மாணவர்கள் குழப்பம் ஏற்படுத்தியமையினால் பாரிய பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
0 Comments