இராஜாங்க அமைச்சர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓடுவதற்கு முதல் மட்டக்களப்பில் பாதைகளை போடவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓடப் போகிறார் என்று சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பார்க்க கூடியதாக இருக்கின்றது. கப்பல் ஓடுவதற்கு முதல் மட்டக்களப்பில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.
பாதைகள் இன்னும் அமைக்கப்படவில்லை குறிப்பாக திகிலி வட்டப்பாதை பாலங்கள் கூட மட்டக்களப்பில் இல்லை இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் தேவைதானா ' இந்தியாவுடன் நாங்கள் நட்புறவைப் பேணவேண்டும் அவர்களுடன் வேலை செய்யத்தான் வேண்டும்.
அதற்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல என்பதை தெரிவித்து கொள்கின்றேன். இன்றைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் அரசாங்கத்தைச் சார்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்தால் பல கெடுபிடிகளுக்கு முகம்கொடுக்கும் மக்களுக்கு எந்தவிதமான ஒரு ஆறுதல் வார்த்தையும் கூறமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 comments: