Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிறார்களுக்கான விசேட அறிவிப்பு

 


தொற்றா நோய்கள் மற்றும் விசேட தேவையுடைய சிறார்களுக்கு செலுத்தப்படும் பைசர் தடுப்பூசி காரணமாக, ஏதேனும் வேறு நோய் அறிகுறிகள் ஏற்படும் பட்சத்தில், அது குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது.


இதன்படி, கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் தொலைபேசி இலக்கமான 0702703954 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விசேட தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் செயற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், காய்ச்சல் ஏற்படுமாயின், பெரசிடமோல் வில்லையொன்றை குடிக்குமாறு வைத்தியர்கள் கூறுகின்றார்.

அத்துடன், களைப்பு ஏற்படும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட இடமளிக்க வேண்டாம் என விசேட வைத்திய நிபுணர் ஷ்யாமன் ரவிந்திரஜித் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments