ஆனமடுவ, கண்ணங்கரா மாதிரி பாடசாலையில் நேற்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி திட்டத்தின் போது இளைஞர்கள் குழுவொன்று மயங்கி விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி ரவி அபேரத்ன, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்க சுகாதாரத் துறை உடனடியாக நடவடிக்கை எடுத்ததாகக் தெரிவித்தார்.
தடுப்பூசி திட்டம் 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களுக்காக முன்னெடுக்கப்பட்டது. சுமார் 2,000 பேருக்கு அங்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்ற பின்னர் 20 நிமிடங்களுக்கு தடுப்பூசி மையத்தில் தங்கியிருந்த பல இளைஞர்கள் திடீரென மயங்கி விழுந்தனர்.
சுகாதார அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து முதலுதவி அளித்து சுமார் ஒரு மணி நேரம் கழித்து அவர்கள் உறவினர்களுடன் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
0 comments: