Advertisement

Responsive Advertisement

குறைந்த விலைக்கு அரச நிறுவுனங்களின் ஊடாக ஆடைகள்


 தற்போதுள்ள விலையையும் விட குறைந்த விலைக்கு சதோச மற்றும் அரச நிறுவுனங்களின் ஊடாக ஆடைகளை விற்பனை செய்வதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.


இலங்கைக்கான ஆடைத் தேவையில் 100 சதவீதமும் உள்நாட்டு உற்பத்திகளைக் கொண்டு பூரணப்படுத்துவதற்கு முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

இதன் காரணமாக உள்ளுர் சந்தையில் ஆடைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என்றும் வர்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

Post a Comment

0 Comments