பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஆயுதம் ஏந்திய படையினரை கடமைகளில் ஈடுபடுத்தும் வகையிலான விசேட கட்டளையொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்றைய பாராளுமன்ற அமர்வுகளில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட விசேட கட்டளையை வாசித்திருந்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 12வது சரத்தில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், இந்த கட்டளையை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் கூறியிருந்தார்
0 comments: