Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையின் ‘காட்போட் சவப்பெட்டி’க்கு சர்வதேசத்திலிருந்து குவியும் ‘ஓடர்’

 


கல்கிசை - மொறட்டுவ மாநகர சபை அறிமுகப்படுத்திய ‘காட்போட்’சவப்பெட்டிகளுக்கு வியட்நாமில் இருந்து ஓடர் கிடைத்துள்ளது.

அத்துடன், தாய்லாந்தில் இருந்து 1000 பெட்டிகளுக்கான ஓடர் பெறப்பட்டுள்ளதாகவும், வரும் திங்கட்கிழமை தாய்லாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் நகராட்சி தவிசாளர் பிரியந்த சஹபந்து தெரிவித்தார்.

கொவிட் உடல்களை அடக்கம் செய்ய வடிவமைக்கப்பட்ட இந்த காட்போட் சவப்பெட்டிக்கு தற்போது இலங்கையில் பெரும் தேவை உள்ளது.

மரப்பெட்டியின் அதிக விலை மற்றும் மரப் பெட்டிகளின் செயலாக்கத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக இந்த காட்போட் சவப்பெட்டிக்கு அதிகளவில் கேள்வி அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments