Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் 88%மானோருக்கு டெல்டா வைரஸ் காணப்படுவதற்கான சாத்தியம் !’

 


மட்டக்களப்பு மாவட்டத்தில், முதன் முதலாக கொரோனா தொற்றுக்கு இலக்காகி, வவுணதீவைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.


அத்துடன், 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸும் 4 பேருக்கு அல்பா வைரஸும் கண்டறிப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் 88 சதவீதமானவர்களுக்கு டெல்டா வேரியன் வைரஸ் இருக்ககூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், அவர் கூறினார்.

மட்டக்களப்பு சுகாதாரப் பிராந்திய சேவைகள் பணிமனையில், இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், கொழும்பு ஸ்ரீ ஜெயவர்த்தன பல்கலைக்கழகத்துக்கு, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 49 மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டன எனவும் அதில் 43 பேருக்கு டெல்டா வேரியன் வைரஸும், 4 பேருக்கு அல்பா வைரஸும் கண்டறியப்பட்டுள்ளதாக, புதன்கிழமை (08) அறிவித்துள்ளனர் எனவும், அந்த 49 மாதிரிகளில் 2 மாதிரிகளின் அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

Post a Comment

0 Comments