Advertisement

Responsive Advertisement

21ஆம் திகதிக்குப் பின் நாடு முழுமையாக திறக்க முடிவு?

 


எதிர்வரும் 21ஆம் திகதிக்குப் பின்னர் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதன்படி 21ஆம் திகதி அதிகாலை 04 மணியுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நிறைவுக்கு வரும் என்றும், அதன் பின்னர் நாட்டின் வழமையான செயற்பாடுகளை தொடர்வது பற்றிய பரிந்துரைகளை அறிக்கையாக முன்வைக்குமப்டியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்திருக்கின்றார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக 21ஆம் திகதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்கா செல்லும்முன் நாடு திறக்கப்படுகின்ற தீர்மானம் வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது

Post a Comment

0 Comments