மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திலுள்ள பெரியகல்லாறு கிராமத்தில் 21 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 8 நபர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிமனையினால் தொடர்ச்சியாக கொரோனா தொற்றைக்கண்டறிவதற்கான அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கமைவாக பெரியகல்லாற்றில் ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்கள்,காய்ச்சல்,தடிமல்,தொண்டை நோவு போன்ற உடல் உபாதைகளினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எழுமாற்றாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்ட்டன. இதன்போது 8 நபர்கள் தொற்றாளர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் எஸ்.,ராஜேந்திரன், மேற்பார்வை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.யோகேஸ்வரன் ஒழுங்கமைப்பில் பொதுச்சுகாதாரப்பரிசோதகர்கள் கொரோனா தொற்றகை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விழிப்புணர்வு செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments