தமக்கு விருப்பமான தடுப்பூசிக்காக காத்திருக்காமல், கிடைக்கபெறும் ஏதேனும் ஒரு தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று முற்பகல் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இந்த விடயத்திகைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அவ்வாறே 60 வயதுக்கு மேற்பட்டோர் முடியுமானவரை விரைவாக, தமக்கு அருகிலுள்ள தடுப்பூசி செலுத்தல் நிலையத்துக்கு சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளுங்கள்.
தற்போது கொரோனா தொற்றால் மரணிப்பவர்களில் 70 முதல் 80 சதவீதமானோர் எந்தவொரு தடுப்பூசியையும் பெற்றுக்கொள்ளாதவர்கள்.
கடந்த இரண்டு வாரங்களுக்குள் தொற்றுறுதியானவர்களே தற்போது அடையாளம் காணப்படுகின்றனர். எனவே, இதனை தற்போது தடுத்தால் இதன் பெறுபேறுகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் தெரியவரும். இந்த செயற்பாடு மிகவும் முக்கியமானதாகும்.
இதனை தற்போது நிறுத்துவதனால் தொற்று பரவலை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். எனவே மக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை உரிய முறையில் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
0 Comments