Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இம்முறை ஐ.நாவில் சிக்கப்போகும் இலங்கை! வெளிவந்தது நிகழ்ச்சி நிரல்

 


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48ஆவது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இந்த அமர்வின் போது, இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட், 30/1 தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைகளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக்கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

உறுப்பினர் மற்றும் பார்வையாளர் நாடுகள் பின்னர் புதுப்பிப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் அதே வேளையில் இலங்கைக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் 30/1 தீர்மானத்திலிருந்து விலகிய இலங்கை அரசாங்கம் உள்ள பொறிமுறை ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments