Advertisement

Responsive Advertisement

கிழக்கில் 9லட்சம் தடுப்பூசிகளில் 8லட்சம்தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன! 23ஆயிரம் தொற்று;:415 மரணம்: 24மணிநேரத்தில் 191தொற்று 3மரணம்! மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் தௌபீக்

 


( வி.ரி.சகாதேவராஜா)


கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 7லட்சத்து 89ஆயிரத்து 150 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்குமாகாணத்தில் இதுவரை 23340தொற்றுகளும் 415மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

இதுவரை அம்பாறை பிராந்தியத்தில் 03 டெல்டா நோயாளிகளும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் சிகிச்சையில் நலமாகவே தற்சமயம் உள்ளனர் .

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 24மணிநேரத்தில் 191தொற்றுகளும் 03மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்றும் கூறினார்.
இந்த 191தொற்றுக்களில் அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 156தொற்றுக்களும் கல்முனைப்பிராந்தியத்தில் 35தொற்றுக்களும் ஏற்பட்டுள்ளன.

அம்பாறைப்பிராந்தியத்தில் அதிகூடிய 48தொற்றுக்கள் உகனைப்பிரதேசத்திலும் 41தொற்றுக்கள் தெஹியத்தகண்டியவிலும் ஏற்பட்டுள்ள அதேசமயம் கல்முனைப்பிராந்தியத்தில் அதிகூடிய 15தொற்றுக்கள் நிந்தவூர்ப்பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ளன.

இறுதியாக இடம்பெற்ற 3மரணங்கள் அவை அக்கரைப்பற்று நாவிதன்வெளி தமன பிரதேசங்களில் சம்பவித்துள்ளன.

இதுவரை ஏற்பட்ட தொற்றுக்கள் ஏறுவரிசைப்படி பார்த்தால் அம்பாறை பிரிவில் 4152தொற்றுக்களும் 42மரணமும் கல்முனை சுகாதாரப்பிராந்தியத்தில் 4488தொற்றுக்களும் 93மரணங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 5499தொற்றுக்களும் 155மரணங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 9201தொற்றுக்களும் 125மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாயுள்ளது.

கடந்தவாரங்களில் கிழக்கில் 200-250நோயாளர்களும் 2-3 மரணங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் தற்போது அத்தொகை மும்மடங்காக மாறிவருகிறது. இது கிழக்கு மாகாணத்திற்கு அபாய அறிவிப்பாக கருதமுடியும்.
இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் இசமூக இடைவெளிகளை பேணுதல் முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார்.

Post a Comment

0 Comments