Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாட்டை உடனடியாக முடக்கு- தாதிய உத்தியோகத்தர்கள் போராட்டம்!

 


நாட்டை முடக்குதல், உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா வைத்தியசாலையின் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரபணி உதவியாளர்களால் ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வைத்தியசாலை வளாகத்தில் இன்று மதியம்12 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வைத்தியசாலையில் போதுமான அளவு ஒக்சியனை களஞ்சியப்படுத்து, கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு ஒருவாரத்திற்கு நாட்டினை முழுமையாக முடக்கு, சுகாதார துறை ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து போன்ற வாசகங்கள் தாங்கிய பாதாதைகளை ஏந்தியிருந்தனர்.

ஆர்பாட்டத்தில் தாதிய உத்தியோகத்தர்கள், மற்றும் சுகாதார பணி உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.


Gallery Gallery

Post a Comment

0 Comments