Advertisement

Responsive Advertisement

உடன் தயார்படுத்தலை மேற்கொள்ளுங்கள் - கோட்டாபய பிறப்பித்துள்ள பணிப்புரை

 


பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரும், கொரோனா பரவுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவது குறித்து ஆராய சுகாதார பிரிவின் விசேட வைத்தியர்கள் குழுவொன்றை நியமித்து பரிந்துரைகளை முன்வைக்க தயார்படுத்துமாறு சுகாதார தரப்புக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆலோசனை வழங்கியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே, ஜனாதிபதி இந்த பணிப்புரையை வழங்கியுள்ளார்.

கொரோனா தடுப்பூசியின் முதலாவது மருந்தளவு (DOSE) சுமார் 100 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், இரண்டாவது மருந்தளவு (DOSE) சுமார் 56 வீதம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இந் நிலையில், தடுப்பூசி செலுத்தி முழுமை பெற்றதன் பினனரும், கொரோனா பரவுமாக இருந்தால், அடுத்தகட்டமாக செய்ய வேண்டியது என்னவென்பது தொடர்பில் ஆராயுமாறு சுகாதார தரப்புக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேளை, இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் நாட்டில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான ஒத்துழைப்பினை அனைத்து தரப்பினரும் வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments