தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.
மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருந்த போதும் இலங்கையில் தொடர்ச்சியாக 4,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையிலேயே ஊரடங்கை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பில் நாளை மறுதினம் (27) அறிவிக்கப்பட உள்ளது
0 Comments