Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பில் டெல்டா , அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் !!

 


மட்டக்களப்பில் டெல்டா வீரியன் மற்றும் அல்பா வீரியன் வைரஸ் தொற்றுள்ளவர்கள் அடையாளம் காணப்டுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார் .

கடந்த சில தினங்களுக்கு முன் பரிசோதனைக்காக  அனுப்பபட்ட 3 மாதிரிகளின் இருவருக்கு டெல்டா தொற்றும் ஒருவருக்கு அல்பா தொற்றும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார் .

கடந்த 24 மணித்தியாலத்தில் 274 தொற்றாளர்களும்  10 மரணமும் சம்பவித்துள்ளதுடன் மட்டக்களப்பில் சராசரியாக 300 மேற்பட்ட நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு  வருவதுடன் மொத்தமாக 211பேர் மரணமடைந்துள்ளார்

மக்கள் பாதுகாப்புடன் சுகாதார நடைமுறைகளை பேணுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments