Home » » அரச உத்தியோகத்தர்களை கடனாளியாக்கி மனஉளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது-கோட்டாபய-மஹிந்தவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

அரச உத்தியோகத்தர்களை கடனாளியாக்கி மனஉளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது-கோட்டாபய-மஹிந்தவுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை!

 


கோட்டாபய- மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களை மேலும் கடனாளியாக்கி அவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கக் கூடாது என பேராதனை பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் சங்கரன் விஜயசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிகவும் குறைந்த தொகையை வருமானமாக பெறும் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பள பணத்தில் இருந்து 50 வீதத்தை கொரோனா நிதியத்திற்கு பெறும் நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இது தொடாபில் மேலும் தெரியவருகையில், 

ஸ்ரீலங்கா அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பள பணத்தில் 50 வீதத்தை கொரோனா நிதியத்திற்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விடயத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரனும் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் மாத்திரமே அரசாங்க ஊழியர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக தெரிவித்த அவர், அரசாங்க உத்தியோகத்தர்கள் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்தியில் கிடைக்கும் குறைந்தளவான சம்பளத் தொகையை கொண்டு அன்றாட வாழ்க்கையை நடத்தும் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தில் அரைவாசியை கோருவதன் நியாயத் தன்மை குறித்தும் பேராசிரியர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே, இவ்வாறான விடயங்களை கருத்தில் கொண்டு ஸ்ரீலங்கா அரசாங்கம் தமது தீர்மானத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எனவும் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் சங்கரன் விஜயசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |